
இயக்குநர் கம் நடிகர் சசிக்குமாரின் அத்தை மகனின் தற்கொலை தென்னிந்திய சினிமாவை அதிர வைத்திருக்கிறது. ஏற்கனவே கந்து வட்டி விவகாரம் தமிழகத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுவும் கடன் சாவு என்பதாலும், கடன் கொடுத்தவர் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருக்கும் அன்புச்செழியன் என்பதாலும் டபுள் திகிலோடு நகர்கின்றன நாட்கள்.
போலீஸ் மற்றும் மீடியாவின் கண்ணிலிருந்து மறைந்து வாழும் அன்புச்செழியன் சமீபத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவர் தன்னை குற்றம்சாட்டும் சசிக்குமாரை பிரித்து மேய்ந்திருக்கிறார், இப்படி...
“என்னை சினிமா வில்லன்களை விட மோசமாக, பொய்யாக சித்தரித்துப் பேசுகிறார்கள் சிலர். சில இயக்குநர்களின் டெரர் படங்களின் குரூர வில்லன்கள் கூட என் அளவுக்கு மோசமாக நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை இவர்களின் கற்பனையில். இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் படங்களை கூட என்னிடம் கடன் வாங்கித்தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நன்றியை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.
எந்த டாக்குமெண்டுஸும் இல்லாமல் சினிமாக்காரர்களுக்கு பணம் கொடுத்து வருகிறேன். வங்கி கொடுத்தால் லோன், நான் பணம் கொடுத்து வசூலித்தால் அது கந்துவட்டியா?
ஐந்து கோடி ரூபாய் வரைக்கும் 2 சதவீத வட்டிக்கு கொடுக்கிறேன். அதற்கு மேல் வேண்டுமென்றால் 1 சதவீதம்தான் வாங்குகிறேன். இதை எப்படி கந்துவட்டின்னு சொல்லுவீங்க?
கடன் திருப்பி தராத நடிகர்களை, நடிகைகளை, தயாரிப்பாளர்களை தூக்கி வந்து அசிங்கப்படுத்துவேன், சித்ரவதை செய்வேன் என்கிறார்கள். இது முழு கற்பனை. அப்படி பாதிக்கப்பட்ட யாராச்சும் ஒருவர் ஓப்பனாக என்னை சாடட்டுமே!
சசியின் இறந்த அத்தை மகன் அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சசிக்குமார் என்னிடம் வாங்கிய மொத்த கடன் 18 கோடி. எட்டு வருடங்களுக்கு முன் வாங்கிவிட்டு இன்னமும் திருப்பி தராமல் இழுத்தடிக்கிறார். கேட்டால் ‘இந்தா! அந்தா!’ என்கிறார்.
எனக்கு பணத்தை செட்டில் செய்யாமல், சமீபத்தில் ‘கொடிவீரன்’ படத்தை 12 கோடிக்கு விற்றிருக்கிறார் சசி. இதனை கண்டித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கங்களில் புகார் அளித்தேன். அவர்களும் ரெட் கார்டு போட்டுவிட்டார்கள். இதில் டென்ஷனான சசிக்குமார் அசோக்கை கடிந்திருக்கிறார்.
எனக்கு அசோக்குமாரின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருக்குது. பத்திரம் பதிவு செய்ய பயன்படும் ஆவண தாளில் கடிதம் எழுதி வைத்து, ‘ஸ்மைலி’ வரைந்து, கையெழுத்தெல்லாம் போட்டுவிட்டா ஒருவன் நிதானமாய் தற்கொலை செய்வான்? அசோக் குமாரின் கடிதத்தில் இத்தனையும் இருக்கிறதென்றால் இது தற்கொலையா?
இதுமட்டுமல்ல சசிகுமாரின் உதவியாளர் கம் மேனேஜர் உதயகுமார் சமீபத்தில் இதே மாதிரி மர்மமாய் இறந்து போனார். சசியின் வட்டாரத்தில் தற்கொலைகள் நீடிப்பதன் மர்மம் என்ன? எதற்கோ ஆசைப்பட்டு, எதையோ செய்துவிட்டு, அதையோ மறைக்க, என்னை பலிகடாவாக்க பார்க்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன், தன் தரப்பில் நிகழும் மர்ம மரணங்களுக்கு சசிக்குமார் தரும் விளக்கம் என்ன?” என்று கேட்டிருக்கிறார்.
என்ன சொல்கிறார் சசி?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.