21 வயது இளையவர்... இருந்தாலும் ரஜினி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்?

By SG Balan  |  First Published Aug 20, 2023, 6:50 PM IST

யோகி சாமியாராக இருப்பதால்தான் அவர் முன்னால் மட்டும் இப்படி ஸ்பெஷல் பணிவு காட்டினார் என்று விளக்கமாக காரணம் கூறுகின்றனர் ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள்.


நடிகர் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படம் வெற்றியைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.

முன்னதாக, ஜார்க்கண் சென்று மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எம்.ஏ. அம்பா பிரசாத் ஆகியோரையும் சந்தித்தார். உ.பி.யில் ஆளுநர் ஆனந்திபென் படேல், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ஆகியோரைச் சந்தித்த பின் முதல்வர் யோகியைச் சந்திக்கச் சென்றார்.

Tap to resize

Latest Videos

மாலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுக்குச் சென்றார். காரில் இருந்து இறங்கி வந்த ரஜினியை எதிர்கொண்டு வரவேற்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் வீட்டு வாசலுக்கு வந்தார். அவரைக் கண்தும் ரஜினி சட்டென்று உடல் முழுவதையும் வளைந்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். பின் பூங்கொத்தும் சிறிய விநாயகர் சிலையையும் பரிசாக வழங்கினார்.

நான் ரொம்ப பாக்கியசாலி... அயோத்தி அனுமன் கோயிலில் வழிபாடு செய்தபின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த் | | | | | | pic.twitter.com/kSncN2ofQz

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ரஜினிகாந்த் ஆதித்யநாத்திடம் பணிவாக ஆசி பெற்றது இப்போது சர்ச்சையாக மாறியுள்ளது. காரணம் யோகி ஆதித்யநாத் சூப்பர் ஸ்டார் ரஜினியைவிட 21 வயது இளையவர். தன்னைவிட சிறியவரிடம் ஏன் இவ்வளவு குனிந்து அடிமணிந்து ஆசி பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ரஜினி யோகியைக் கண்டவுடன் காலில் விழுந்த காட்சியின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகிறார்கள்.

மனைவியையும் கூட்டிச் சென்றிருந்த ரஜினி வீட்டு வாசலில் வைத்தே யோகி ஆதித்யநாத் காலில் விழ வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் தடாலடியாகக் கேள்வி கேட்கின்றனர். அதே சமயத்தில் ரஜினி ரசிகர்கள் சிலர் அவரது பணிவை நினைத்து புல்லரித்துப் போய் தலைவரின் அலப்பறை என்று உற்சாகத்தில் திளைக்கின்றனர்.

கர்நாடகாவில் டிஆர்டிஓ ட்ரோன் விபத்து; சோதனையின்போது நடந்த விபரீதம்

இந்நிலையில் ரஜினி காரணத்தோடு தான் உ.பி. முதல்வர் காலில் விழுந்தார் என ரஜினி ஆதரவாளர்கள் முட்டுக்கொடுத்து பதில் அளித்து வருகிறார்கள். அதாவது ரஜினி ஆன்மிகத்தில் ரொம்ப ஈடுபாடு கொண்டவர் என்பதால் சாமியாரைக் கண்டாலே காலில் விழுந்து வணங்கிவிடுவாரம். சாமியார்கள் விஷயத்தில் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்கும் வழக்கம் ரஜினிக்குக் கிடையாதாம்.

யோகி சாமியாராக இருப்பதால்தான் அவர் முன்னால் மட்டும் இப்படி ஸ்பெஷல் பணிவு காட்டினார் என்று விளக்கமாக காரணம் கூறுகின்றனர் ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள். அதுமட்டுமில்லை, இதற்கு முன்னால் கூட தன்னைவிட வயதில் சிறிய சாமியார்களைப் பார்த்தபோது காலைத் தொட்டுக் கும்பிடு போட்டிருக்கிறாராம் தலைவர் ரஜினிகாந்த்.

உ.பி.யை கலக்கும் 'ஜெயிலர்'! யோகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் ரஜினிகாந்த் போட்டோஸ்!

click me!