உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஜெயிலர் பட வெற்றியால் ரஜினிகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்கள் தற்போது அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் நேற்று நடந்த சம்பவம் தான். ஆன்மீக பயணமாக உத்தர பிரதேசம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த், யோகியின் காலில் விழுந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ரஜினி காலில் விழுந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் படு வைரல் ஆனதால், ரஜினியை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் சிலரே அவரது இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ரஜினியை விமர்சித்து மீம்ஸ்கள் ஒருபக்கம் பறந்துவர, மறுபக்கம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா, கபாலி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.இரஞ்சித், காலில் விழுவது பற்றி ஆவேசமாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... உபி முதல்வர் காலில் விழுந்த ரஜினியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... இதன் பின்னணியில் இப்படியொரு மேட்டர் இருக்கா!
அந்த வீடியோவில், “ஏன் கால்ல விழுற, அறிவில்ல உனக்கு. இன்னொருத்தன் கால்ல விழுறது எவ்வளவு பெரிய அடிமைத்தனம். அந்த அடிமைத்தனத்தை நீ ஏன் தொடர்ந்து செஞ்சிட்டு இருக்க. உன் அப்பா, அம்மா காலை தவிர வேற எவன் கால்லயும் விழாத நீ” என பா.ரஞ்சித் ஆவேசத்துடன் பேசும் அந்த பழைய வீடியோ தற்போதைய சூழலுக்கு ஒத்துப் போவதாக கூறி நெட்டின்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Vera vazhi Therila tag panida vendiyathu thaan pic.twitter.com/OSOgYuAupw
— CSK (@CSK_myspace)நடிகர் ரஜினிகாந்த் பா.இரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக காலா படத்தில் அடிமைத்தனத்தை விரும்பும் அதிகார வர்கத்தினருக்கு எதிராக ரஜினிகாந்த் பேசும் நிறைய வசனங்கள் இடம்பெற்று இருக்கும், அதிலும் குறிப்பாக வில்லன் நானா படேகர் ரஜினியை தன் காலில் விழும்படி கூறுவார், அதற்கு ரஜினி, தன் காலை மேசையின் மீது வைத்து நீ வேண்டுமானால் என் காலில் விழுந்துக்கோ, உன்னை மன்னிக்கிறதா, தண்டிக்கிறதானு நான் முடிவு பண்றேன் என பேசி இருப்பார். இப்படி படத்தில் வீர வசனம் பேசிவிட்டு ரியல் லைபில் அதற்கு உல்டாவாக ரஜினி நடந்துகொண்டது தான் தற்போது விவாதப்பொருளாக மாறி உள்ளது.
இதையும் படியுங்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்த் | வைரல் வீடியோ