உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமையான இன்று லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.
லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை மூத்த நடிகர் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 9 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த விழாவில் அகிலேஷ் யாதவை சந்தித்தேன். அன்று முதல் இருவரும் நண்பர்கள் ஆனோம்.
போனில் பேசுகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்புக்காக இங்கு வந்தபோது அவரை சந்திக்க முடியவில்லை. இப்போது அவர் இங்கே இருக்கிறார் அதனால் அவரைச் சந்தித்தேன்” என்று கூறினார் ரஜினிகாந்த். முன்னதாக, சனிக்கிழமையன்று, அவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் தனது ‘ஜெயிலர்’ திரைப்படத்தை உபியில் பார்த்தார். ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர்' பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையை பொழிந்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் வர்மா, யோகி பாபு மற்றும் வசந்த் ரவி போன்ற முக்கியப் பிரமுகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்