
தனுஷின் கடந்த சில நாட்களாக ஆடும் ஆட்டம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் கோபத்தில் கொந்தளிக்க வைத்திருக்கிறது. ‘என் படத்தை எப்ப ரிலீஸ் பண்ணனும்னு நானேதான் முடிவு பண்ணுவேன்’ என்று முரட்டுப்பிடிவாதம் பிடித்து தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தைக் கூட தனுஷ் துச்சமென தூக்கியெறிந்ததால் ஆணவம் தலைக்கேறி ஆடும் தனுஷை ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்க்க தொடங்கியிருக்கிறது.
அதற்க்கு காரணம், டிசம்பர் 15 முதல் ஜனவரி 17 வரை எந்தத் தேதியில் யார் வேண்டுமானாலும் படம் ரிலீஸ் செய்து கொள்ளட்டும் என விஷால் அறிவிப்பு தான். ஆமாம் இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தனுஷ், தனது இஷ்டத்துக்குப் படம் ரிலீஸ் செய்வேன் எனச் சொன்ன காரணத்தால் இத்தனை மாதமாக நடைமுறையில் இருந்ததை மாற்றிவிட்டார்களே என மற்ற தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் எரிச்சலில் தவிக்கின்றனர்.
விஷாலின் இப்படிப்பட்ட முடிவுக்குக் காரணம் என்னவென்று கேட்டால் அவர்கள் வேறு மாதிரி சொல்கின்றனர். தனுஷின் அனைத்துப் படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. மழைக்காலம் தொடங்கிவிட்டதால், தமிழ் சினிமாவுக்கும் இது ஷூட்டிங் இல்லாத காலம். சங்கம் ரெட் கார்டு போட்டாலும், இப்போதைக்கு அதன் தாக்கம் தெரியாது.
விஜய் ஆண்டனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பவர்; அதுவும் சொந்தத் தயாரிப்பில் என்பதால் அவருக்கான ரெட் கார்டு எப்போது வேண்டுமானாலும் தனது பலத்தைக் காட்டும். ஆனால், தனுஷ் இப்போதைக்கு சொந்தத் தயாரிப்பில் எந்தப் படத்தின் ஷூட்டிங்குக்கும் ஏற்பாடு செய்யவில்லை.
எனவே, ரெட் கார்டு போட்டாலும் அது அதிக நாட்களுக்கு இழுத்துக்கொண்டே செல்லும் என்பதால், தனுஷ் விஷயத்தில் இப்போது செயல்படுவது சரியல்ல என்று விஷாலுக்கு ஐடியா கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே யாராவது எப்படியாவது போகட்டும் என மனம் நொந்து போன விஷால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். ரஜினியின் பலத்தில் ஆடும் தனுஷ் மீது சக நடிகர்கள் கொந்தளிப்பதால் இது எங்கே போய் முடியும் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.