கடத்தல் நாடகம் ஆடிய பவர் ஸ்டார் வீடு திரும்பினார்!

Published : Dec 09, 2018, 12:23 PM ISTUpdated : Dec 09, 2018, 12:24 PM IST
கடத்தல் நாடகம் ஆடிய பவர் ஸ்டார் வீடு திரும்பினார்!

சுருக்கம்

சென்னையில் தனது மோசடி வேலைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னைத்தானே கடத்திக்கொண்டு நாடகம் ஆடிய நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

சென்னையில் தனது மோசடி வேலைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னைத்தானே கடத்திக்கொண்டு நாடகம் ஆடிய நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் மீது சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வேலை வாங்கித் தருவதாகவும், வட்டிக்கு பணம் வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசன் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக அவரது மனைவி ஜூலியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜூலி, தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சீனிவாசன் செல்போன் என்னை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போன் உதகையில் இருப்பதாக டவர் காட்டியது. உடனே போலீசார் சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் நான் சொத்து பிரச்சனை காரணமாக உதகைக்கு வந்துள்ளேன். விரைவில் சென்னைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து மனைவி புகார் அளித்திருந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் காவல் நிலைத்தில் ஆஜராகியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
வாய்ப்பில்ல ராஜா... குணசேகரன் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சாமியாடி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்