
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த, நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர். இதில் விஷால் செயலாளராகவும், கார்த்தி, பொன்வண்ணன், ஆகியோர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் பதவி வகித்து வந்தனர்.
தற்போது இவர்களுடைய பதவி காலம் முடிவு பெற உள்ளதால், அடுத்த நடிகர் சங்க தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். விரைவில் நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.
இதிலும் சென்ற முறை போட்டியிட்ட நாசர் தலைமையிலான அணியினர், மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எஸ்.வி சேகர், தற்போதைய நடிகர் சங்க உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வருவதாகவும், ராதிகா, டி.ராஜேந்தர் அல்லது தன்னுடைய தலைமையில் ஒரு புதிய குழு நடிகர் சங்கத்திற்கு அமையும் என கூறியுள்ளார். மேலும் நடிகர் விஷால் வாய் ஜாலத்தில் ஏமாற்றி வருவதாகவும், அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது என அவருக்குத் தெரியவில்லை என தாக்கி பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.