
அஜீத்தின் ‘வீரம்’ சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட ‘சங்கத்தமிழன்’ படங்களின் தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி சென்னையில் இன்று மதியம் 1 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 75.
விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார் . அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி.
இவர் ’தாமிரபரணி’ , ’படிக்காதவன்’, ’வேங்கை’ , ’வீரம்’ , ’பைரவா’ ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார் . விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து சில தினங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்ட இவரது 6வது படமான ’சங்கத் தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.