
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள், பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்து விட்டனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஆர்.ஜே .வைஷ்ணவி. இவர் மற்றவர்களைப் பற்றி புறம் பேசியதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், மற்றவர்கள் போல் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட வில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார். அவ்வப்போது தன்னுடைய காதலர் அஞ்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் சமூக அக்கறை சார்ந்த விஷயங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.
வைஷ்ணவி தன்னுடைய உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார். இப்போது ஸ்பைடர் உமனாக மாறி, இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் ஒரு காமிக்ஸ் போட்டி நிகழ்ச்சிக்காக இந்த கெட்டப்பிற்கு மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.