
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஷூட்டிங் ஸ்பாட்டில் பசியோடு திருந்த நாய்க்கு, பிஸ்கட் ஊட்டி விட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகில், காதல், காமெடி, ஆக்ஷன், வில்லத்தனம் என அனைத்து விதமான கதாப்பாத்திரங்களில் நடித்து, பிரபலமானவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் சூப்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
இந்நிலையில் இவர் இந்தியில் நடித்து வரும் 'சூர்யவன்ஷி' படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. அப்போது அங்கு ஒரு தெரு நாய் மிகவும் பசியுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. அந்த நாய் பசியுடன் இருப்பதை அறிந்த அக்ஷய் குமார், உடனடியாக தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரிந்து ஊட்டி விட்டார்.
அதை வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.