நடிகர் விமல் 1.5 கோடியை சீட்டிங் செய்துள்ள ஒரிஜினல் களவாணி... தயாரிப்பாளர் போலீஸில் புகார்...

By Muthurama LingamFirst Published May 12, 2019, 2:11 PM IST
Highlights

‘களவாணி’ படப்புகழ் நடிகர் விமல் தன்னிடம் 1.50 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திரும்பத்தராமல் மோசடி செய்துவருவதாக பிரபல தயாரிப்பாளர் சிங்கார வேலன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.
 

‘களவாணி’ படப்புகழ் நடிகர் விமல் தன்னிடம் 1.50 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திரும்பத்தராமல் மோசடி செய்துவருவதாக பிரபல தயாரிப்பாளர் சிங்கார வேலன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.

இயக்குநர் சற்குணத்தின் ‘களவாணி 2’ படம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் தொடர்ச்சியாக நீடித்துவருகின்றன. தான் நடித்த ‘மன்னர் வகையறா’படத்துக்காக சில கோடிகளை கடன் வாங்கிய நடிகர் விமல் ‘களவாணி 2’ படத்தைத் தானே தயாரிப்பதால் அப்படத்தின் விநியோக உரிமையைத் தருவதாகக் கூறியதாக சிங்காரவேலன் தரப்பு கூறுகிறது. 

இது தொடர்பாக தனிப்பட்ட கட்டப்பஞ்சாயத்துகளில் சிங்காரவேலன் கோர்ட் படியேறி தனக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கிய இயக்குநர், அடுத்த படியாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சிங்காரவேலன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேற்று கமிஷனர் அலுவலகம் வந்த சிங்காரவேலன் பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,’ இப்பிரச்சினையில் சற்குணம் கொடுத்த புகாருக்கு விளக்கமளிக்கவே வந்தேன். களவாணி 2’ படத்தைத் தானே தயாரிப்பதாகக் கூறித்தான் நடிகர் விமல் என்னிடம் கடன் வாங்கினார். அதற்கு ஆதாரமாக அவர் கையெழுத்துப்போட்டுக்கொடுத்த பத்திரங்களை போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறேன். ஆனால் எங்களுக்கு முறையான பதில் தராமல் விமல் ஓடி ஒளிகிறார்’ என்றார் சிங்காரவேலன்.

click me!