வெளியேற போவது மூவரில் யார்? பரபரப்பில் உச்சத்தில் வெளியான புரோமோ ..!

Published : Dec 06, 2020, 04:05 PM IST
வெளியேற போவது மூவரில் யார்? பரபரப்பில் உச்சத்தில் வெளியான புரோமோ ..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன்,  ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இரண்டாவது புரோமோவில் நிஷா காப்பாற்றப்பட்டதையும் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன்,  ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இரண்டாவது புரோமோவில் நிஷா காப்பாற்றப்பட்டதையும் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ, இன்று வெளியேற உள்ள நபர் யார் என்பதை கமல் தெரிவிப்பது போல் வெளியாகியுள்ளது.

நாமினேஷன் லிஸ்டில் உள்ள ஷிவானி, சனம், அனிதா ஆகிய மூவரும் கைகளை உயர்த்தி காட்டுகிறார்கள். பின்னர் பேசும் கமல் வீட்டில் ஒரு எண்ணமும், நாட்டில் ஒரு எண்ணமும் இருக்க கூடும் அல்லவா? மக்க என்ன செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம் என்பதை எடுத்து கூறி எவிக்ஷன் கார்டை பிரிக்கிறார்.

அதற்கு முன்பாக சனத்திடம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்... அதற்காக தானே வந்திருக்கிறோம் என கூறுகிறார். இவரை தொடர்ந்து பேசும் அனிதா, சென்றாலும் மனதிருப்தியோடு தான் போவேன், இருந்தாலும் இதற்கு பிறகு நன்றாக விளையாடுவேன் என தெரிவிக்கிறார். ஷிவானி, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக  சிம்பிள் அண்ட் ஸ்வீட்டாக சொல்கிறார்.

பின்னர் கமல் எவிக்ஷன் கார்டை எடுத்து மக்கள் முன் காட்டி விட்டு... உள்ளே காட்ட தயாராகும் போது அணைத்து போட்டியாளர்களும் பரபரப்பில் உச்சத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!