வைலன்ஸின் விளிம்பு... பார்த்துகிட்டு இருக்க முடியாது..? பாலாஜியை வெளுத்து விட்ட கமல்..!

Published : Dec 05, 2020, 07:46 PM IST
வைலன்ஸின் விளிம்பு... பார்த்துகிட்டு இருக்க முடியாது..? பாலாஜியை வெளுத்து விட்ட கமல்..!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதி நாட்களை எட்டியுள்ள நிலையில் கமல், ஹவுஸ் மேட்ஸ் செய்த ஒவ்வொரு தவறுகளையும் மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்து, வெளுத்து வாங்க வந்துள்ளார்.  

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதி நாட்களை எட்டியுள்ள நிலையில் கமல், ஹவுஸ் மேட்ஸ் செய்த ஒவ்வொரு தவறுகளையும் மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்து, வெளுத்து வாங்க வந்துள்ளார்.

அந்த வகையில், முதல் இரண்டு புரோமோக்களிலுமே... கமலின் கோவம் வெளிப்பட்டதை நாம் பார்க்க முடிந்தது. இரண்டாவது புரோமோவிலேயே... எனக்கும் உங்களை போலவே... நிறைய கேள்விகள் மனதில் இருக்கிறது என கூறுகிறார். பின்னர் அகம் டிவி வழியே பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடிக்கும் கமல், இந்த விளையாட்டின் அடி நாதம் புரியவில்லையா என கேள்வி எழுப்பி, அனிதா மற்றும் பாலாஜியை சுற்றி காட்டினார்.

கேப்ரில்லா - சோம் ஆகியோர் சொல்லி வைத்து கொண்டு செய்தது போல் இருந்தது. ஏன் விட்டு கொடுத்தீர்கள் சோம் என்ற கேள்வியை எழுப்பிய பின், நிஷாவை பார்த்து... உங்கள் சாயலில் இன்னொரு சகோதரி இருக்கிறார்களா என கேட்கிறார். ரமேஷுக்கு நீங்கள் விட்டு கொடுக்கும் போது நிஷாவை அங்கு காணவில்லை என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில்... சனத்திடம் உச்ச கட்ட வைலென்ஸ் காட்டிய பாலாஜியை வெளுத்து வாங்கியுள்ளார்.

இதுகுறித்த பரபரப்பான புரோமோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?