
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன், ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து இன்றைய முதல் புரமோவில் சனம், அனிதா மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் தான் வெளியேற உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவில், தற்போது டேஞ்சர் சோனில் உள்ள மூவரில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களின் கேட்கிறார்.
அப்போது பலர் சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்ததை பார்க்க முடிகிறது. சனம்ஷெட்டி தங்க வேண்டுமென விரும்புவதாக ரியோ, அர்ச்சனா,நிஷா, ஆரி,ரம்யா, ஆகியோர் தெரிவித்தனர். இதில் வித்தியாசமாக அனிதா வெளியே போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று ஆரி கூறினார். அப்போது குறுக்கிட்ட கமல் ’யார் தங்க வேண்டும் என்றுதான் நான் கேள்வி கேட்டேன்’ என்று கூற அதனை அடுத்து அவர் ’சனம்’ என்று கூறினார்
அனிதா தங்க வேண்டும் என ஆஜித்தும், ஷிவானி தங்க வேண்டும் என சோம் மற்றும் பாலாஜியும் தெரிவித்தனர்.
மொத்தத்தில் சனம்ஷெட்டிக்கு ஹவுஸ்மேட்ஸ்களின் ஆதரவு குவிந்து இருந்தாலும் அவர் தான் இந்த வாரம் வெளியேற இருப்பதாகவும், குறைவான வாக்குகள் அவர் தான் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், ஏதேனும் அதிசயம் நடக்குமா என்பதும் பிக்பாஸ் ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.