
பிக் பாஸ் நிகழ்சியில் நேற்றைய தினம் ஒரு சுவாரஸ்யமான டாஸ்க் கொடுக்கப்பட்டது, அது என்ன வென்றால். தற்போது பிக் பாஸ் குடும்பத்தில் தலைவராக உள்ள கணேஷ் வெங்கட்ராம் யார் முதலில் எலிமினேட் ஆவார்கள் என ஒருவருவாராக தேர்தெடுத்து கடைசியில் வின்னர் யார் ஆவார் என கூறினார்.
கணேஷின் கருத்து கணிப்பில் முதலாவது எலிமினேட் ஆவார் என தேர்தெடுக்கப்பட்டவர் நடிகை ஓவியா, இரண்டாவதாக ஆர்த்தியும், மூன்றாவதாக வையாபுரியும் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அனைவர் கழுத்திலும் ஒரு நம்பர் எழுதப்பட்ட அட்டைகளை தொங்கவிட்டார்.
இதில் நான்காவதாக ஜூலி, ஐந்தாவதாக நமிதா, ஆறாவதாக காயத்ரி ரகுராம், ஏழாவதாக ஆரவ், எட்டாவதாக ரைசா, ஒன்பதாவதாக சக்தி, கடைசியாக சினேகன் வெற்றிபெறுவார் என்றும் கூறினார்.
இதனை மறுபரிசீலனை செய்யும் பிக் பாஸ் ஓவியாவை இரண்டாவது இடத்திற்கு செல்ல வைக்கிறது. இதனால் மற்ற போட்டியாளர்களுக்கு ஓவியா மீது இன்னும் பல மடங்கு கோபம் அதிகரித்துள்ளது என்பது அவர்களின் வார்த்தைகளில் இருந்தே தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.