
’களங்கம் வந்தாலென்ன பாரு, அதுக்கும் நிலான்னுதான் பேரு’ என்று வைரமுத்து தன்னிலை விளக்க வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், ’இப்பக்கூட வெளிய தலைகாட்டாம என்னதான் பண்றீங்க?’ என்று நீண்டகாலமாக ஒதுங்கியிருக்கும் பொன்மணி வைரமுத்துவையும், தற்காலிமாக தலைமறைவாக கபிலன் மற்றும் மதன் கார்க்கியையும் மீடியாக்காரர்கள் பேட்டிக்காக வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆனால் மேற்படி மூவரும் தொலை தொடர்புக்கு அப்பால் இருப்பதாகவே தொடர்ந்து பதில்கள் வந்துகொண்டிருக்கின்றன.
சின்மயிக்காக அவரது அம்மா தொண்டை வற்ற குரல் கொடுக்கும்போது பொன்மணியை விடுங்கள். அட்லீஸ்ட் அவரது பிள்ளைகளாவது தங்களது தந்தைக்கு வக்காலத்து வாங்கவேண்டாமா என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இத்தனைக்கும் கார்க்கியும், கபிலனும் ட்விட்டர் உட்பட்ட வலைதளங்களில் மிகத்தீவிரமாக வினையும் எதிர்வினையும் ஆற்றிவருபவர்கள்.
வைரமுத்து வகையறாக்களின் கனத்த மவுனத்தைக் கண்டு கடுப்பான சின்மயி ஆதரவாளர்கள், சின்மயி தொடர்பாக எதற்கெடுத்தாலும் அவரது வயதான அம்மாவை நோண்டி நோண்டி கேள்வி கேட்கும் ஊடகங்கள், சின்னதாக மெனக்கெட்டாலும் வைரமுத்துவின் மனைவி பொன்மணியைக் கண்டுபிடித்து அவரது கணவரின் யோக்கியதை குறித்து பேட்டி எடுக்கலாமே? என்று பத்திரிகையாளர்களை உசுப்பேற்றி வருகின்றனர்.
ஆக யாரிடமாவது பொன்மணி தன் கணவர் குறித்து கருத்து தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.