நயன்தாரா எங்கப்பா?... விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் அஞ்சலி... ஏக்கத்துடன் கேள்வி கேட்கும் ரசிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 8, 2020, 12:40 PM IST
Highlights

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் இருக்கும் அஞ்சலி, விக்னேஷ் சிவனுடன் இணைந்து வீடியோ காலில் டப்பிங் பேசி முடிந்துள்ளார். 
 

கொரோனா  வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவரும் நிலையில் இந்தியாவில் ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் முதலே அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் சினிமாவை மட்டும் நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையால் வாடும் சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: அனுஷ்காவா, சிரஞ்சீவியின் தம்பி மகளா யாரை மணக்கப்போகிறார் பிரபாஸ்?... அவரே கூறிய அதிரடி பதில்...!

சினிமா தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்பிற்கும், சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உடன் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஷூட்டிங் நிறைவடைந்த பல தமிழ் படங்களின் இறுதிக்கட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் புதுமையான முயற்சியாக விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நடிகை அஞ்சலி வீடியோ காலில் டப்பிங் பேசியுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!

கோலிவுட் முன்னணி நடிகையான அஞ்சலி சமீபத்தில் நடித்துள்ள திரைப்படம் “நிசப்தம்”. அனுஷ்கா ஷெட்டி, மாதவன் நடித்துள்ள இந்த படத்தில், அஞ்சலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் தனக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் “நிசப்தம்” படத்தின் வெளியீட்டை அஞ்சலி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படம் ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் இருக்கும் அஞ்சலி, விக்னேஷ் சிவனுடன் இணைந்து வீடியோ காலில் டப்பிங் பேசி முடிந்துள்ளார். 

இதையும் படிங்க:  சிம்புவிடம் இருந்து நயன்தாராவிற்கு தொற்றிய பழக்கம்... அப்போ கும்முனு ஆனதுக்கு இதுதான் காரணமோ?

அது விக்னேஷ் சிவன் இயக்கும் படமா?, வெப் சீரிஸா? அல்லது கவுதம் வாசுதேவ் மேனன், சாந்தனு ஸ்டைலில் ஏதாவது குறும்படத்தை இயக்கி வெளியிட போகிறாரா? என்று தெரியவில்லை. வீடியோ காலில் விக்னேஷ் சிவனுடன் பேசிக்கொண்டே டப்பிங் செய்வது போன்ற வீடியோவை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்த பலரும் நயன்தாரா எங்கே? என விக்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள் என்பதால் வீடியோ காலில் கூட நயனை காட்டச் சொல்லி நச்சரிக்கின்றனர். சிலர் மட்டுமே என்ன படம், பெயர் சொல்லுங்க என்று கமெண்ட் செய்துள்ளனர். 
 

click me!