இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னைக்கு எப்போது வருகிறது? வெளியான தகவல்..!

By vinoth kumar  |  First Published Jan 26, 2024, 7:44 AM IST

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். பவதாரிணி என்ற ஒரு மகளும் இருந்தார். மகன்கள் இருவரையும் போலவே பவதாரிணியும் இசை அமைப்பாளராகவும், பின்னணி படகியாகவும் இருந்து வந்தார்.


இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கேன்சர் நோயால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். பவதாரிணி என்ற ஒரு மகளும் இருந்தார். மகன்கள் இருவரையும் போலவே பவதாரிணியும் இசை அமைப்பாளராகவும், பின்னணி படகியாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், சபரீசன் என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட பவதாரிணிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தார். 

Latest Videos

இதையும் படிங்க;- அடக்கடவுளே... இன்னும் ட்ரீட்மெண்ட் கூட ஆரம்பிக்கல? பவதாரிணியின் கேன்சர் குறித்து கண்ணீருடன் கூறிய நடிகை!

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து கல்லீரலில் கல் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பவதாரிணியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்க இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதும், அதுவும் 4வது கட்டத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இதையும் படிங்க;- மறைந்தார் "இசையின் மகள்" பவதாரிணி.. அவருடைய கணவர் யார் தெரியுமா? - பலரும் அறியாத சில தகவல்கள் இதோ!

இந்நிலையில், இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர், இலங்கையில் இருந்து இன்று மாலை பவதாரிணி உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

click me!