
தான் பாலியல் தொல்லைக்கு ஆளான போது அப்படி கத்தினேன். ஆனால் பெண்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை என நடிகை சனுஷா தெரிவித்துள்ளார்.
நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,இவர் நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது தனது பக்கத்து பெர்த்தில் படுத்திருந்த ஆண்டோ போஸ் என்பவர் சனுஷாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சுதாரித்து கொண்ட சனுஷா அந்த நபரை பிடித்து டிடிஆரின் உதவியோடு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதிகாலை 1.10 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சனுஷா, தான் பாலியல் தொல்லைக்கு ஆளான போது அப்படி கத்தினேன். ஆனால் பெண்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
எனக்கு நடந்த பாலியல் தொல்லையை எனது குடும்பத்தாருடன் சேர்ந்து சட்ட ரீதியில் சந்திப்பேன் எனவும் எங்கோ நடக்கும் சம்பவங்களுக்கெல்லாம் சமூக வலைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு கருத்து போடுபவர்கள், தங்கள் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.