அரசியலுக்கு வருகிறாரா சமந்தா? ஆடிப்போன குடும்பம்..!

First Published Feb 2, 2018, 1:19 PM IST
Highlights
actress samantha enter in political


நடிகர்களின் அரசியல்

நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வரும் காலம் இது போல. ரஜினி, கமல்,விஜய், விஷால் என்று தங்களது அரசியல் ஆசை பற்றி அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள். இதில், ரஜினி ஒருபடி மேலே போய் தனிக்கட்சி ஆரம்பிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

ஆந்திர அரசியல்

தமிழக அரசியல் களம் இப்படி இருக்க தெலுங்கானா, ஆந்திரா அரசியல் களமோ அதற்கு மேல் இருக்கிறது. நடிகர், நடிகைகள் அரசியலில் குதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தேர்தலில் சமந்தா

அதிலும் குறிப்பாக தெலுங்கு மருமகளான சமந்தாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. சமந்தா நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும் ஐதராபாத்தில் கணவருடன் செட்டிலாகி விட்டார்

அரசியல் கட்சிகளுடன் நட்பு

சமூக சேவைகளில் அக்கறை காட்டி வரும் சமந்தாவை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சி தன் வலைக்குள் கொண்டு வந்திருக்கிறது. அக்கட்சியின் அரசியல் பிரமுகர்களிடம் சமந்தா நட்பாக பழகி வருகிறார்.

கைத்தறி தூதர் பொறுப்பு

மேலும் தெலுங்கானா அரசின் கைத்தறி துறை தூதர் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து பார்த்தால் வரும் 2019  சட்டமன்ற தேர்தலில் செகந்திரபாத் தொகுதியில் அவரை களம் இறக்க கட்சி எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா சினிமா புகழ் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. இது கிறிஸ்தவ மதத்தவர் அதிகம் வாழும் தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமாதானம்

சமந்தாவை அரசியலில் இறக்குவதற்கு மாமனார் நாகார்ஜுனா தரப்பிலிருந்து எதிர்ப்பு வராமல் இருக்க அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!