மறக்கமுடியாத மாதிரி வச்சு செய்யும் செல்வராகவன்... சிக்கி சின்னாபின்னமான சூர்யா!

Published : Nov 30, 2018, 09:12 AM ISTUpdated : Nov 30, 2018, 09:14 AM IST
மறக்கமுடியாத மாதிரி வச்சு செய்யும் செல்வராகவன்...  சிக்கி சின்னாபின்னமான சூர்யா!

சுருக்கம்

NGK பட விவகாரத்தில் சொல்லியபடி நடந்து கொள்ளாத காரணத்தினால் நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் மீது மிகுந்த டென்சனில் இருப்பதாக கூறப்படுகிறது.  

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தனது அடுத்த படத்தை செல்வராகவன் இயக்க உள்ளதாக அறிவித்தார்.  உடனடியாக பூஜைகள் தொடங்கின, படப்பிடிப்பு முடிந்து NGK தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

செல்வராகவனை இயக்குனராக வைத்துக் கொண்டு ஒரு படத்தை துவங்கிய உடன் அந்த படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவித்திருப்பதை பார்த்து இன்டஸ்டிரியே சிரித்தது. காரணம் செல்வராகவன்  ஒரு படத்தின் படப்பிடிப்பை இரண்டு ஆண்டுகள் வரை கூட நடத்துவார். மேலும் எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் தான் படப்பிடிப்பு தளத்திற்கே அவர் வருவார்.   செல்வராகவன் தான் முன்பு போல் இல்லை மாறிவிட்டேன் என்று கூறியே சூர்யா கால்ஷீட்டை வாங்கியதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் படப்பிடிப்பு துவங்கிய பிறகு செல்வராகவன் தனது வழக்கமான பாணியில் படப்பிடிப்பை நடத்த ஆரம்பித்தார். இதனால் சொல்லியபடி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. சரி பொங்கலுக்காவது ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் பிரபு அறிவித்தார்.   ஆனால் பொங்கலுக்கு இல்லை தமிழ் புத்தாண்டான ஏப்ரல் மாதம் NGK வெளியாகும் சூழல் கூட தெரியவில்லை என்கிறார்கள். இதனால் சூர்யா செல்லும் இடத்தில் எல்லாம் அவரது நண்பர்கள் மட்டும் அல்ல சக திரையுலகினரும் கூட படம் ரிலீஸ் ஆகுமா என்று சந்தேகத்துடன் கேட்கிறார்கள்  

மேலும் செல்வராகவனிடம் சிக்கி சின்னாபின்னம் ஆனவர்கள் வரிசையில் சூர்யாவும் சேர்ந்துவிட்டதாக திரையுலகில் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரன்வீர் சிங்கின் கடைசி 6 படங்கள்: பிளாக்பஸ்டரை விட பிளாப்கள் அதிகம்
ஹீரோவாகும் முன்பே ஷாக் கொடுத்த அகிரா நந்தன்: பவன் கல்யாண் ஏன் சிரித்தார்?