தீவிரமாக காதலிக்கும் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி….. திருமணம் எப்போ தெரியுமா ?

 
Published : Jun 05, 2018, 07:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தீவிரமாக காதலிக்கும் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி….. திருமணம் எப்போ தெரியுமா ?

சுருக்கம்

when Nayan thara vignesh sivan marriage

நயன்தாரா – விக்னேஷ் சிவன்  இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். இது திரையுலகத்துக்கே தெரிந்த  ஓபன் ரகசியம். ஆனால் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்  இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை அவர்கள் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். இருவரும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காதல் கிசுகிசுக்கள் பரவுவதையும் பொருட்டாக கருதவில்லை.



அமெரிக்காவில் ஜோடியாக சுற்றிய படங்களை விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதன்பிறகு வி, என் என்ற ஆங்கில எழுத்துகளில் டீ சர்ட் அணிந்து கட்டிப்பிடித்து நின்றபடி படம் வெளியிட்டனர். பட விழாக்களுக்கும் ஜோடியாக வருகிறார்கள்.

சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா 2 விருதுகளை பெற்றார். இப்போது அந்த விருதுகளுடன் நயன்தாராவை தன்னுடன் நெருக்கமாக வைத்து செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

அதில் “நயன்தாரா விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. பிளாக் அன்ட் ஒயிட் கண்ணு உன்னை பார்த்தால் கலரா மாறுதே, நம்ம எப்போது இப்படி விருதுகள் வாங்கி இந்த பிள்ளை கையில் கொடுக்கப் போறோமோ” என்ற வாசகங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வந்தன. ஆனால்  திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து குடித்தனம் நடத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நிஜமாகவே திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையென்றால் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், விரைவில் அவர்கள் தங்கள் திருமணத் தேதியை விரைவில் அறிவிப்பார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!