எங்க பட்டியல் ரொம்ப பெருசு என நிரூபித்த தமிழ்படம்-2.0; நாங்க உங்களையும் விடல சாமி ஸ்கொயர்;

 
Published : Jun 04, 2018, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
எங்க பட்டியல் ரொம்ப பெருசு என நிரூபித்த தமிழ்படம்-2.0; நாங்க உங்களையும் விடல சாமி ஸ்கொயர்;

சுருக்கம்

you are also in our list says Tamil film 2.0

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன் ரிலீசாகிய ”தமிழ்படம்” தமிழ் சினிமாவை எக்கசக்கமாக கலாய்த்திருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் இதுவரை எதை எல்லாம் மாஸ் என எண்ணி இருந்தார்களோ, அத்தனையையும் கேலி செய்திருந்தது தமிழ்படம்.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் ரிலீசான இத்திரைப்படத்தின் டீசர், இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்திலும் சிவா தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் தமிழ் சினிமாவை மட்டும் கலாய்த்த இவர்கள், இந்த முறை ஒரு படி மேலே போய், தமிழகத்தில் நடந்த அரசியல் சம்பவங்களையும் கேலி செய்திருக்கின்றனர்.

இதனால் இந்த படத்திற்கான மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ்படம் 2.0 டீசரில் விஜய் நடித்திருந்த மெர்சல்,தலைவா,கத்தி போன்ற படங்களையும், அஜீத்தின் மங்காத்தா, விவேகம், விஷாலின் ஆம்பள, துப்பாறிவாளன் ஆகிய படங்களையும் கலாய்த்திருக்கின்றனர். இதெல்லாம் போதாதென விஜய் சேதுபதியின் விக்ரம்வேதாவையும் கலாய்த்திருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

இதுவரை திரைக்கு வந்த படங்களை மட்டுமல்ல, திரைக்கு வரப்போகும்  படங்களையும் கூட நாங்க கலாய்ப்போம் எனும்படியாக, தமிழ்படம் 2.0 குழு ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது . அதில் ஏழுச்சாமி என சாமி  ஸ்கொயர் படத்தை கலாய்த்திருக்கின்றனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!