
தென்னிந்திய திரையுலகையே தனது நடிப்பால் கலக்கி கொண்டிருப்பவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் இருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் இட்டு, தங்கள் காதலை ஒருவாறு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.
சமீபத்தில் நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. அவர் நடித்திருந்த அறம் திரைப்படத்திற்காக இந்த விருது நயன்தாராவிற்கு கிடைத்தது. மேலும் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைக்கான விருதும் நயன்தாராவிற்கு கிடைத்தது.
அவர் பெற்ற இரண்டு விருதுகளுடனும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் செல்ஃபி எடுத்திருந்தார். அதனை டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன். ”என் விருதுடன் அவளுக்கு கிடைத்த விருதுகளுடன்” என பதிவிட்டிருந்தார். இதில் அவர் நயன்தாராவை தான், என் விருது என காதலுடன் குறிப்பிட்டிருந்தார்
மேலும் இது போல நான் எப்போ விருது வாங்கி நயன்தாரா விடம் கொடுக்க போகிறேனோ? எனவும் கமெண்ட்செய்திருந்தார். நயன்தாரா நடித்திருந்த அறம் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான பேரையும் புகழையும் வாங்கி தந்தது. விக்னேஷ் சிவன் டிவிட்டரில் அறம் படத்திற்காக நயன் தாராவின் கடின உழைப்பை பாராட்டியதுடன், அறம் படக்குழுவினரையும் பாராட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.