
விஜய் குழுமம் விஜய் அவார்ட்ஸ் எனும் பெயரில், திரைத்துறைக்கான விருது வழங்கும் விழாவை, 9 ஆண்டுகளாக நடத்தி வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சில பல காரணங்களால் 10வது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடை பெறவில்லை. அதனை தொடர்ந்து தற்போது விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தென்னிந்திய திரைத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ”தளபதி விஜய்” இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இது அவருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. தளபதி விஜய்-ன் மெர்சல் திரைப்படத்திற்காக அவருக்கு நிறைய விருதுகள் கிடைக்கும். என காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் வராதது வருத்தத்தை அளித்தது.
இந்த ஆண்டு ஃபேவரிட் நடிகருக்கான விருதிற்கு விஜய் நாமினேட் செய்யப்பட்டிருந்தார். அதற்காக அவருக்கு எக்கச்சக்கமாக வாக்களித்திருந்தனர் அவரின் ரசிகர்கள். ஆனால் விஜய் வராததால் அந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை.
மேலும் விஜய் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு வேறு சில காரணங்களும் வெளியாகி இருக்கின்றன. விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் அதனால் தான் வரவில்லை என சிலர் கூறினாலும், அவர் ஒரு பிரபல தொலைக்காட்சி குழுமத்தின் தயாரிப்பில் இப்போது நடித்து வருகிறார். அதனால் அவர்கள் தடுத்ததன் பேரில் தான் விஜய் வரவில்லை. என வேறு ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.