Vijay Speech: சிந்தித்து முடிவெடுங்கள்.! அரசியல் தலைவர்கள் மற்றும் பொய் பிரச்சாரம் பற்றி விஜய் கூறியது என்ன?

By manimegalai a  |  First Published Jun 28, 2024, 12:02 PM IST

தளபதி விஜய் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வரும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா தற்போது சென்னையில் நடந்து வரும் நிலையில் அதில் விஜய் பொய் பிரச்சாரம் குறித்து மாணவர்கள் முன்பு பேசியுள்ளார்.
 


கடந்த ஆண்டு தளபதி விஜய், நடத்திய கல்கி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒரே கட்டமாக நடந்த நிலையில், இதனால் விஜய் ஓய்வே இல்லாமல் நின்று கொண்டே பரிசு வழங்கியது அவரை சிரமத்திற்கு ஆளாக்கியது. அதே போல் விழா முடிவடைய இரவு 11 மணிக்கு மேல் ஆனதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்கும் தாமதம் ஏற்பட்டது. 

எனவே இந்த முறை கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டதுள்ளது. அதன்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் முதல் கட்டமாக இன்று காலை முதல்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கே விழா நடக்கும் இடத்திற்கு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வர தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய் 10 மணியளவில் விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார்.

Tap to resize

Latest Videos

வந்த உடனேயே மேடையில் ஏறி அனைவருக்கும் இருகரம் கூப்பி தன்னுடைய வணக்கத்தை தெரிவித்த விஜய், பின்னர் மாணவ - மாணவர்களுடன் பேசி மகிழிந்தார். பின்னர் மாணவ செல்வங்கள் முன்பு பேச வந்த விஜய் அண்மைக்காலமாக தமிழகத்தில் அரங்கேறி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார். குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் போதை பொருள் பற்றி பேசி 'Say no to temporary Pleasures, say no to drugs' என்கிற உறுதி மொழியை எடுக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்படியே அரசியல் பக்கம் தன்னுடைய பேச்சை திருப்பிய விஜய், தமிழகத்துக்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை என்று அழுத்தி கூறினார். அதே போல் "உண்மையை பொய் மாதிரியும், பொய்யை உண்மை மாதிரியும் சமூக வலைத்தளத்தில் பல செய்திகள்  பரவுகிறது. அவை அனைத்தையும் நீங்கள் பாருங்கள். ஆனால் அதில் எது உண்மை என்பதை  அடையாளம் காண வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசிய தளபதி விஜய்,  எது சரியானது என்று சிந்தித்து முடிவெடுங்கள் என பேசியுள்ளார். 

click me!