சினிமாவில் பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் - மெர்சல் படத்தை குத்திக் காட்டிய தன்ஷிகா...

Asianet News Tamil  
Published : Nov 14, 2017, 10:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சினிமாவில் பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் - மெர்சல் படத்தை குத்திக் காட்டிய தன்ஷிகா...

சுருக்கம்

What to do if you want to make money in cinema - Danshika

தீபாவளி நேரத்தில் மெர்சல் படத்தை வெளியிடுவதில்  மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது என்றும் சினிமாவில் பணம் இருந்தால் மட்டும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்றும் நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

நடிகை தன்ஷிகா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘விழித்திரு’.

இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தன்ஷிகாவுடன், விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, எரிகா, தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளியாகவிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது. அதனால் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.

அப்போது என்ன நடந்தது என்பதை நடிகை தன்ஷிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘தீபாவளிக்கு ‘மெர்சல்’ படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தன. மற்றப் படங்களும், எங்கள் படங்களும் கவனிக்கப்படவில்லை.

சினிமாவில் பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பது எனக்கு அப்போது புரிந்தது” என்று தன்ஷிகா வெளிப்படையாக தெரிவித்தார்.

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை பற்றி நேரடியாக குற்றம் சாட்டிய தன்ஷிகா,  “நான் இப்பொழுது தைரியமா பேசவில்லை என்றால் வேறு எப்போதும் பேச முடியாது.

நான் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறேன் அங்கெல்லாம் கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை’’ என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?