
ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பு துவங்கியது.
இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு குத்து பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.
இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அரையில் முரட்டுக் குத்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.