
நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா...’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி. ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா....’ பாடலை பாடியுள்ளார். கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.