காவ்யா மாறன் விஷயத்தில் ரஜினிகாந்த் அன்று சொன்னது இன்று வைரல்; அப்படி என்ன சொன்னார் தலைவர்!!

By SG Balan  |  First Published May 25, 2024, 9:32 AM IST

"ஐபிஎல் நல்லா போயிகிட்டு இருக்கு. சன்ரைசர்ஸ் மேட் ஆடும்போது காவ்யா மாறனின் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கும்போது நமக்கும் டென்ஷன் ஆகிறது. காவ்யாவை பார்க்கும்போது நமக்கு பி.பி. ஏறிவிடுகிறது" என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


2024 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் 2வது குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பற்றி பேசிய வீடியோ வைரலாகி இருக்கிறது.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது.

Tap to resize

Latest Videos

பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Congrats team 👏👏 into finals of . 🔥🔥 the lucky charm of “Rajinikanth Premier League” ❤️

Kavya Maran , Kalanith Maran , fans happy ❤️❤️❤️ | | pic.twitter.com/sRHMcG2fBb

— Suresh Balaji (@surbalu)

ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்றை டிரெண்டிங்கில் உள்ளது. அதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த முறை நல்ல வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

"ஐபிஎல் நல்லா போயிகிட்டு இருக்கு. சன்ரைசர்ஸ் மேட் ஆடும்போது காவ்யா மாறனின் எக்ஸ்பிரஷன் எல்லாம் பார்க்கும்போது நமக்கும் டென்ஷன் ஆகிறது. காவ்யாவை பார்க்கும்போது நமக்கு பி.பி. ஏறிவிடுகிறது" எனவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

ரஜினி ரசிகர்களும் ஹைதராபாத் ரசிகர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து சன்ரைசர்ஸ் அணி பைனலுக்கு நுழைந்ததைக் கொண்டாடி வருகின்றனர்.

2வது குவாலிஃபையர் போட்டி நடந்த இதே சென்னை மைதானத்தில் இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது. நாளை நடைபெறும் இந்த இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

click me!