
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே, அனைவரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாளராக இருந்து வருபவர் விக்ரமன். தன்னை நோக்கி மற்ற போட்டியாளர்கள் எப்படி பட்ட விமர்சனங்களை கூறினாலும், கோபத்தை தீ போல் கக்கினாலும், எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய கட்டுப்பட்டை இழக்காமல், பொறுமையாக இருந்து விளையாடி வருவது இவருடைய மிகப்பெரிய பலம் என கூறலாம்.
அதே போல் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் தலைவிரித்தாடிய போது, தன்னை பற்றி மற்ற போட்டியாளர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என தன் மனதில் எழும் கருத்துக்களை அனைவர் முன்பும் எடுத்து வைத்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் விக்ரமன் மனம் உடைந்து அழும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரன் மாஸ்டர் ஜேசன் உடன் இணைந்து பான் இந்தியா இசையில் டி.ராஜேந்தர் வெளியிட்ட தேச பக்தி பாடல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு மிகவும் நெருக்கமான போட்டியாளர்களின் ஒருவராக இருந்தவர் என்றால் அது அமுதவாணன் தான். முதல் ஃபைனலிஸ்ட்டாக அவர் தேர்வு செய்யப்பட்டாலும், ஃபைனல் வரை செல்லாமல் பிக்பாஸ் கொடுப்பதாக அறிவித்த 11.75 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு, வெளியேறுவதாக கூறி பண பெட்டியுடன் வெளியேறினார்.
சிறை வாசிகளுக்காக... புத்தகம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த பார்த்திபன்! குவியும் பாராட்டுக்கள்..!
இதுகுறித்து தெரியவந்ததும், தன்னை அறியாமலேயே விக்ரம் மனம் உடைந்து அழ துவங்கிவிட்டார். அவரை அமுதவாணன் சமாதம் செய்துவிட்டு, பின்னர் வெளியேறினார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் மற்றும் விக்ரமனின் ஆதரவாளர்கள்... இது தான் உண்மையான நட்பின் அடையாளம் என கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.