
பாகுபலி-2 படம் இதுவரை ரூ.1350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
ஆனால், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்கள் அதை பற்றி ஒரு வார்த்தையும் இதுவரை பேசவில்லை என்று முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றன சினிமா வட்டாரங்கள்.
மேலும், பாகுபலி தென்னிந்திய படம் என்பதால்தான் வயிற்றெரிச்சலில் அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள் என சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் இந்த விமர்சனம் செய்யும் அதிமேதாவிகள்.
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக பாகுபலி பற்றி பேசியுள்ளார்.
"பாகுபலி முதல் பாகத்தை பார்த்திருக்கிறேன். சினிமாவிற்கு எழுச்சியூட்டும் விதமாக அது இருந்தது.
நான் இரண்டாம் பாகத்தை இன்னும் பார்க்கவில்லை. அதுவும் முதல் பகுதி போலவே நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும், தற்போது சிஜி தொழில்நுட்பம் சினிமா துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது இல்லாதபோதும் நாம் நல்ல படங்களை எடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது” என்று அசால்டாக சொன்னார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.