
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில், இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி ”யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்” இந்த இருவரும் தான் மிக இளம் வயதினர். இதனால் இவர்கள் செய்யும் சேட்டைகள் எக்கச்சக்கம்.
சிலருக்கு இவர்கள் ஓவியாவை காப்பியடிப்பது போல தோன்றலாம். ஆனால் இவர்கள் வயதுக்கு இப்படிதான் நடந்து கொள்வார்கள், என்பதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
இவர்கள் செய்யும் இந்த சேட்டைகளை பார்த்து இவர்களை காமெடி பீஸ் என நினைத்திருக்கின்றனர் சக போட்டியாளர்கள். மேலும் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் பிரமோவில், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா செய்யும் குறும்புகளால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருக்கிறது. இதனால் இவர்களை கேலி செய்கின்றனர் சக போட்டியாளர்கள்.
இந்த கேலி கொஞ்சம் குத்தலான கேலியாகவும் இருக்கிறது. இதனால் கடுப்பான இந்த இருவரும் தனியாக பேசும்போது, நம்ம சிரிச்சுகிட்டே இருக்கறவங்கனு எல்லாரும் நினைக்கிறாங்க. இனி தான் தெரியும் நாம எவ்வளவு சீரியசான ஆளுங்கனு, என சொல்கிறார் யாஷிகா.
அதே போல ஐஸ்வர்யாவும் ஃபைனல்ஸ் போகப்போவது இந்த இரண்டு பேர் தான் என்று கூறிகிறார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை ஆனால் ஏதோ திட்டட்தில் இருக்கின்றனர் இந்த இருவரும், என்று மட்டும் நன்றாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.