பணம் கொடுத்தால் தான் பிரமாண்ட விழாக்களுக்கு நடிகர் - நடிகைகள் வருவார்கள்...! அதிரடி ஆர்டர் போட்ட விஷால்..!

 
Published : Jun 18, 2018, 07:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பணம் கொடுத்தால் தான் பிரமாண்ட விழாக்களுக்கு நடிகர் - நடிகைகள் வருவார்கள்...! அதிரடி ஆர்டர் போட்ட விஷால்..!

சுருக்கம்

vihsal put the order for private channels

திரை உலகில் நடத்தப்பட்டு வரும் திரைப்பட விழாக்கள் ,விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இனி நடிகர், நடிகைகள் கலந்துக்கொள்ள வேண்டும் என்றால் இதனை கருத்தில் கொண்டு தான் நிகழ்ச்சியாளர்கள் செயல் பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  "நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி சமீப காலமாக வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது". 

இந்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்பெரும் வகையிலோ ,அல்லது தயாரிப்பாளர் சங்கம் ,நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக கொடுக்கவரும் நிகழ்ச்சியாளர்கள், நடத்தும் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது 

இதற்க்கு முன்னால் நடைபெற்ற... கலர்ஸ் டிவி நிகழ்ச்சி , விஜய் டிவி நிகழ்ச்சி, மற்றும் கலாட்டா டாட் காம் விருது விழாக்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு, அவர்களிடம் வாங்கிய பணத்தை  அறக்கட்டளையின் செயல்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் சமீபத்தில் ஹைதராபாதில் நடைபெற்ற பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த நடைமுறையை அந்த விழா நடத்துபவர்களிடம் எடுத்து கூறியும்,  அவர்கள் ஒத்துழைப்பு தராததினால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகளிடம் வேண்டுகோள் வைத்தோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று கொண்டு  அந்த விருது விழாவினை தவிர்த்த நயன்தாரா , குஷ்புசுந்தர்  , விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இதற்கு நடிகர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பால் பல ஏழை  கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும் என்றும்,   இனி வரும் காலங்களில் மற்ற திரை கலைஞர்களும் இதனை பின்பற்றுமாறும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வேண்டுகோள் விருதுள்ளர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!