
தெலுங்கில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தேஜஸ்வினி. திருமணத்திற்கு பின் தொகுப்பாளர் பணியை விட்டு விலகினார். இந்நிலையில் இவர் சந்தேகத்திற்கு இடமான வகையில், தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ்வினி ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த பவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பவன் ஐடி துறையில் பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு தான் தேஜஸ்வினிக்கு குழந்தை பிறந்தது.
தேஜஸ்வினிக்கு குழந்தை பிறந்ததில் இருந்து, பவனின் தாயார் இவர்களுடன் தான், இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி, தேஜஸ்வினியை அழைப்பதற்காக, பவனின் தாயார் கதவை தட்டியுள்ளார்.
அப்போது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை, இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தேஜஸ்வினி தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்... சந்தேகத்திற்குரிய தற்கொலையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின் தேஜஸ்வினி உடல் விஜயவாடா அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவரின் மரணம் குறித்து அறிந்ததும் இவருடைய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் பலர் வீட்டின் மும்பு குவிய தொடங்கினர். மேலும் இவரின் மரணம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.