
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளாக, இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள், செய்யும் சேட்டைகள் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு, ஆனந்த் வைத்தியநாதன் 'முத்து சரங்களை' என்கிற சங்கதியை சொல்லி கொடுக்கிறார்.
இவர்களுக்கு பின்னால், ஐஸ்வர்யா தத்தா மற்றும் சென்ராயன் ஆகியோர் தவளை போல் தாவி... தாவி... செல்கிறார்கள்... இது ஒருவேளை இவர்களுக்கு கொடுத்த தண்டனையாக கூட இருக்கலாம்.
நடிகை யாசிகா மிகவும் அறிவு பூர்வமாக ஒரு கேள்வி கேட்கிறார். அது என்னவென்றால் "ரெண்டு கரப்பான்பூச்சி போகும் போது ஒரு கரப்பான் பூச்சி... ஆளுமா டோலுமா என்று பாட்டு பாடியதாம். இந்த பாடலை கேட்டதும் ஒரு மற்றொரு கரப்பான் பூச்சி இறந்து விட்டதாம். அது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்...? பாஸ் உங்களுக்கு தெரிந்தால் இதுக்கு பதில் சொல்லுங்க, தெரியவில்லை என்றால் இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாசிகா சொல்லுவாங்க பார்த்து தெரிஞ்சிக்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.