’தளபதி 64’படத்தில் இணைந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி...

Published : Nov 09, 2019, 01:17 PM IST
’தளபதி 64’படத்தில் இணைந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி...

சுருக்கம்

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பளினியாக அறிமுகமான ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரைப்பட ஆடியோ லான்ச், விருது விழா என பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரம்யா. 

ஏற்கனவே பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் குவிந்துள்ள ‘தளபதி 64’படத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜே ரம்யாவும் இணைந்துள்ளார். இத்தகவலை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா நடிக்கிறார். இத்தகவலை ரம்யாவும் உறுதி செய்துள்ளார். தில்லியில் கடந்த 20 நாள்களாக நடந்த படப்பிடிப்பில் ரம்யா கலந்துகொண்டுள்ளார். தில்லியில் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பளினியாக அறிமுகமான ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரைப்பட ஆடியோ லான்ச், விருது விழா என பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரம்யா. 'ஓ காதல் கண்மணி' படத்தில் தொடங்கி தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அஜித்தின் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி பலரது கவனம் ஈர்த்த 'ஆடை' படத்தில் அமலாபாலுடன், அவரது தோழியாக முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரம்யா “இது தான் எனது வாழ்க்கையின் மிக சிறந்த உண்மையான தருணம், இப்படி ஒன்று நடப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், தளபதி விஜயிக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!