
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்த சித்ரா, படிப்படியாக உயர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களின் மனதில் முல்லையாக மனம் வீசிக்கொண்டிருந்த சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேமந்திற்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் சித்ராவின் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே விஷயம் அவர் முதலும் கடைசியுமாக நடித்த கால்ஸ் படத்தின் டிரெய்லர் அடுத்தடுத்து படைத்து வரும் சாதனைகள் தான். இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.
தமிழில் இந்த படத்தின் டிரெய்லர் 1.70 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தமிழை தவிர பிறமொழி ரசிகர்களும் சித்ராவின் கடைசி படமான கால்ஸ் படத்தின் டிரெய்லருக்கு அமோக ஆதரவு அளித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் 26 ஆம் தேதியன்று திரைக்கு வர தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.