
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடித்து முடித்துள்ள 'அயலான்' படத்தின் இருந்து 'வேற லெவல் சகோ' லிரிகள் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள அயலான் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதைதொடர்ந்து கிராபிக்ஸ் பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் இஷா கோபிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இதற்கிடையில், கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி கொடுக்க பட்டதால், 'அயலான்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மீண்டும் துவங்கியது.
படத்தில் அதிகளவு கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால், அதை முடிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர் படக்குழுவினர். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டதை தொடர்ந்து, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல் பிப்ரவரி 17 ஆம் தேதி, இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர், ஏ.ஆர்.ரகுமானின் அருமையான இசையில்... இதமான வரிகளோடு கூடிய 'அயலான்' ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் 'டான்' பட குழுவினருடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.