
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்துடன், உச்சகட்ட புகழுக்குச் சொந்தக்காரராக வலம் வரும் அஜித், 25 வருடங்களுக்கு முன்பு தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் நாராயணன் புகார் கூறியது பரபரப்பைக் கிளப்பியது.
1996-ல் அஜித் என்னிடம் பணம் கேட்டார். என்னுடைய அப்பா அம்மா சிங்கப்பூர் போக வேண்டும் எனக்கு ஒரு 6 ரூபாய் பணம் கொடுங்கள் என்று கேட்டார். ரூபாய் அந்த 6 லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் வாங்கி கொடுத்துவிட்டேன். பின்னர் மற்றொரு பட தயாரிப்பில் அஜித்தை நடிக்க வைப்பதற்காக அவருக்கு ரூ.12 லட்சம் கொடுத்ததாகவும், பின்னர் வேறு ஒரு தருணத்தில் படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி அத்தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். இந்த ரூ.18 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கேட்கவே இல்லை என்றும் தனக்கு பணத்தை தேவை ஏற்பட்ட போது தான் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
அஜித் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், அவர் இப்படி ரூ.18 லட்சம் ரூபாயை ஏமாற்றுவாரா? என ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால் அஜித் தன்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பலமுறை கூறிவந்த நாராயணன் தற்போது அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
அஜித்திற்கு பணம் கொடுத்ததற்கான வங்கி ஆதாரத்தை பத்திரமாக வைத்திருக்கும் நாராயணன், அஜித்தை சந்திக்க பலமுறை முயன்றும் முடியாமல் போனதாகவும், அவரை சந்திக்க வேண்டுமென கடிதம் அனுப்பியும் எவ்வித முயற்சியும் பழிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.