சித்ராவின் கனவு நினைவாக போகிறது..! நாள் குறித்த படக்குழு..!

By manimegalai aFirst Published Feb 13, 2021, 1:23 PM IST
Highlights

சின்னத்திரையில் எட்டிய தூரத்தை, வெள்ளி திரையில் எட்ட வேண்டும் என்கிற கனவு நினைவாவதற்குள் இந்த உலகை விட்டே சென்று விட்டார் நடிகை சித்ரா. இந்நிலையில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கால்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சின்னத்திரையில் எட்டிய தூரத்தை, வெள்ளி திரையில் எட்ட வேண்டும் என்கிற கனவு நினைவாவதற்குள் இந்த உலகை விட்டே சென்று விட்டார் நடிகை சித்ரா. இந்நிலையில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கால்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறி தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் தற்கொலை தற்போது வரை நம்பமுடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நாயகியாக மின்னுவதற்கு முன்பே இவர் மறைந்தாலும், விரைவில் இவர் நடித்து முடித்துள்ள 'கால்ஸ்' திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான 'கால்ஸ்' படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள், இவருடைய சொந்த வாழ்க்கைக்கு தொடர்புடையதாக உள்ளது மற்றொரு ஆச்சர்யம் எனலாம். 'கால்ஸ்' ட்ரைலர் வெளியான ஒரு வாரம்வாரத்திலேயே 1.5மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதே போல் இந்த படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

சித்ரா முதல் முறையாக கதாநாயகியாக நடித்துள்ள 'கால்ஸ்' திரைப்படம், பிப்ரவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக தற்போது படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஜெ.சபரிஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, எஸ். ஜெயக்குமார், ஜெ.காவேரி, ஜெ.சபரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜெ. சபரிஷ் தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!