
நடிகர் சிம்பு தன்னுடைய பிறந்தநாளுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு ஒன்றின் வீடியோவை வெளியிட அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் சிம்பு இந்த மாதம், பிப்ரவரி 3ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை மிக விமர்சியாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும், காமன் டிபி ஒன்றை வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சிம்புவின் ரசிகர்கள் இரவு 12 மணியிலிருந்து சமூகவலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை குவித்தனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் சிம்பு தனக்கு கிடைத்த மிகச் சிறந்த, பிறந்தநாள் பரிசு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள செய்துள்ளார். இந்த சிறப்பு பரிசை கொடுத்தது வேறு யாருமல்ல சிம்புவின் சகோதரியின் குட்டி மகன் தான்.
தன்னுடைய மாமாவின் பிறந்தநாளுக்காக அவர் பரிசு ஒன்றை கொடுக்க, அதைப் பார்த்து சிம்பு சந்தோஷத்தில் அந்தக் குட்டி செல்லத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
பிறந்தநாள் முடிந்த கையோடு தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் பிஸியாகியுள்ளார். இதை தொடர்ந்து 'பத்துதல' மற்றும் கௌதம் மேனன் இயக்கவுள்ள படங்களிலும் பிசியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.