
தொகுப்பாளினி அஞ்சனா:
பிரபல தொலைக்காட்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளியாக பணியாற்றியவர் அஞ்சனா. இவர் தொகுத்து வழங்கிய லைவ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் தான் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் தொகுப்பாளினி பணியில் இருந்து விலகுவதாக கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் அஞ்சனா என்பது அனைவரும் அறிந்தது தான்
பட வாய்ப்புகள்:
அஞ்சனா தொகுப்பாளர் என்பதால் பேச்சில் மட்டும் கெட்டிக்காரர் இல்லை, அழகினாலும் அனைவரையும் பொறாமைப்பட வைத்தவர். இதனால் இவர் தொகுப்பாளராக இருக்கும் போதே இவருக்கு பல சீரியல்களிலும், படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் இவர் அப்படி வந்த வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை.
வாய்ப்புகளை தவிர்த்த காரணம்:
ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இவர் ஏற்காததற்கு காரணம். இவர் வைத்துள்ள பாலிசி தானம். இவர் தொகுப்பாளினியாக பணியாற்ற வரும் போதே திரைப்படங்களில் நடிக்க கூடாது என தனக்கென ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு தான் வந்தாராம்.
விஜய் பட வாய்ப்பு:
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருக்கும் பலர் தற்போது திரைப்படம், மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க செல்கின்றனர். ஆனால் அஞ்சனா வந்த வாய்ப்புக்கு கூட டாட்டா காட்டி விட்டு, தொகுப்பாளர் வேலைக்கும் முழுக்கு போட்டு விட்டு தற்போது சந்தோஷமாக கணவர் கயல் சந்திரனுடன் வழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில், விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, இளைய தளபதியின் ரசிகையான எனக்கு விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் சந்தோசம் தான்.
ஆனால் நான் அவர் படத்தில் நடிக்க மாட்டேன். நான் கூறும் இந்த பதிலை விஜய் அவர்கள் அறிந்தாலே சந்தோஷப்படுவார் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.