Pushpa Movie : கேள்வி கேட்ட விஜே... கையை தட்டிவிட்டு சென்ற அல்லுஅர்ஜுன் - சர்ச்சை குறித்து அஞ்சனா விளக்கம்!

Published : Dec 25, 2021, 08:12 PM IST
Pushpa Movie : கேள்வி கேட்ட விஜே... கையை தட்டிவிட்டு சென்ற அல்லுஅர்ஜுன் - சர்ச்சை குறித்து அஞ்சனா விளக்கம்!

சுருக்கம்

தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் (Allu Arjun) சென்னையில் நடந்த 'புஷ்பா' பட புரோமோஷன் (Pushpa movie promotion) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது,  தொகுப்பாளினி அஞ்சனா (Anjana) கையை தட்டி விட்டு விட்டு கீழே இறங்கிய வீடியோ ஒன்று வைரலான நிலையில் இதுகுறித்து அஞ்சனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  

தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் சென்னையில் நடந்த 'புஷ்பா' பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது,  தொகுப்பாளினி அஞ்சனா கையை தட்டி விட்டு விட்டு கீழே இறங்கிய வீடியோ ஒன்று வைரலான நிலையில் இதுகுறித்து அஞ்சனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில், பல்வேறு நாடுகளில் வெளியானது. இந்த படத்தின் புரோமோஷன் பணிக்காக நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் படக்குழுவினர் அனைத்து ஊர்களிலும் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: Vijayakanth: பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்களே..? விஜயகாந்த் ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்த பிரேமலதா!

 

அந்த வகையில் சென்னையில் நடந்த புரோமோஷன் பணியிலும் அல்லு அர்ஜுன், உள்ளிட்ட அனைத்து படக்குழுவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தொகுத்து வழங்கிய நிலையில், அல்லு அர்ஜுனிடம் 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு 2 ஸ்டெப் டான்ஸ் ஆட சொல்லி அஞ்சனா கேட்ட போது, அவர் அஞ்சனாவின் கையை தட்டி விட்டு விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார். இதனால் அஞ்சனா எழுப்பிய கேள்வியால் கோவமடைந்து தான் அல்லு அர்ஜுன் மேடையில் இருந்து கீழே இறங்கியதாக தகவல் பரவியது.

மேலும் செய்திகள்: Nayanthara: காதல் பார்வையில் விக்னேஷ் சிவனை விழுங்கும் நயன்தாரா... வைரலாகும் கிறித்துமஸ் கொண்டாட்ட புகைப்படம்!
 

இதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது... இதற்க்கு அஞ்சனா தற்போது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது... "அந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் முடிந்து விட்டது, இதனை கருத்தில் கொண்டு நேரமின்மை காரணமாக, நான் இரண்டு ஸ்டெப் டான்ஸ் ஆட சொல்லிய போதும், அதனை நாகரிகமாக மறுத்துவிட்டு கீழே இறங்கினார் அல்லு அர்ஜுன். இது தான் நடந்தது இதை பெரிதாக்க வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் அல்லு அர்ஜூன் தான் கேட்ட கேள்வியால் கோபமாக மேடையில் இருந்து இறங்கினார் என்பது தவறான தகவல் என்றும் விளக்கம் அளித்துள்ளார்".

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?