தலயால் எரியும் பனிக்காடு! விவேகம் டீஸர் ‘நெவர், எவர்’ தி மாஸ் அண்டு கிளாஸ்...

 
Published : May 11, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
தலயால் எரியும் பனிக்காடு! விவேகம் டீஸர் ‘நெவர், எவர்’ தி மாஸ் அண்டு கிளாஸ்...

சுருக்கம்

Vivegam teaser Ajith is at his stylish best in this spy thriller

ராக்கெட்டின் காக்பிட் முனையில் உட்கார்ந்து பயணித்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும்? 1,2,3...என மைக்ரோ செகண்டுகளுக்கு இடையில் வேகத்தின் கியர் எகிறிக்கொண்டே போக ச்சும்ம்ம்மா ஜிவ்வ்வ்....ன்னு காற்றை கிழிச்சுகிட்டு பறக்கும் அந்த ஃபீலிங்கை கற்பனை செய்யவே முடியாது. கிட்டத்தட்ட அந்த எனர்ஜி ஃபீலிங்கில்தான் தல ரசிகர்கள் தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம்?...விவேகம் படத்தின் டீஸர் இஸ் ஆன் தி ஸ்கிரீன்!

டைமர் அகா கவுண்ட் டவுன் ஐகான்கள் பொதுவாக எங்கே காண்பிக்கப்படும்? சில நொடிகளில் புத்தாண்டு பிறக்க போகுது, சில நொடிகளில் பாம் வெடிக்க போகுது, சில நொடிகளில் ராக்கெட் எகிற  போகுது என்று  எண்ட் ஆஃப் தி செகண்டில் நடக்கும் பிரளயத்தை காண்பிக்கத்தான் இதை வைப்பார்கள். இங்கே தல படத்தின் டைட்டில் டிஸைனே கவுண்ட் டவுன் ஐகான் தான் என்றால் படம் நெடுகிலும் நொடிக்கு நொடி பிரளயம்தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸையே பஞ்சர் ஆக்கி பணால் செய்த பாகுபலியின் ரேட்டிங்கை நேஷனல் லெவலில் தாறுமாறாக நடுங்க வைத்திருக்கிறது விவேகம் டீஸர்.

இன்னா சொல்லுது டீஸர்?

தல தனது டீஸர் மற்றும் டிரெய்லரில் வழக்கமாக ஆடும் ’டபுள் கலர்’ ஆட்டத்தை இங்கேயும் வெறித்தனமாக ஆடியிருக்கிறார். நல்லவனா? ரொம்ப கெட்டவனா? என்று இப்போது எந்த முடிவுக்கும் வரமுடியாதபடி செம பேலன்ஸிங்காக ஃப்ரேம்ஸை வெட்டி அடுக்கியிருக்கிறார் இயக்குநர். ஆக ஆகஸ்டு மாசம் வரைக்கும் ரசிகன் தலயின் ரோலை பற்றி ரோடு ரோடா டிஸ்கஸ் பண்ணிட்டு திரிய வேண்டிதான்.

டீஸர் துவங்கிய இரண்டாவது நொடியில் ஸில் அவுட் லுக்கில் இரண்டு கைகளிலும் கன் உடன் கின்னென்று நிற்கிறார் தல. ஐம்பத்து எட்டு செகண்ட்ஸ் ஓடும் டீஸரில் முழுக்க முழுக்க தல தரிசனம்தான். ஹைடெக்  கார்ப்பரேட் ஆபீஸ், அதல பாதாளம், பனி மலை, பனிக்காடுகள் என்று எங்கெங்கெல்லாமோ நிற்கிறார், நடக்கிறார், பாய்கிறார், பறக்கிறார் அஜித்.

ஏகன், மங்காத்தா, ஆரம்பம், வேதாளம் என்று அத்தனையும் கலந்தடித்து சம்மருக்கு சிவா படைத்திருக்கும் மசாலா ஐஸ்மோராக உள்ளது விவேகம் டீஸர்.

’இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர்! எவர்! கிவ் அப்!’ என்கிற இரண்டு வரி டயலாக்கை டீஸர் முழுக்க பிரித்து மேய்ந்து தனது ஸ்லோ அண்டு செம ஸ்டெடி ஸ்டைலில் டெலிவெரி செய்கிறார்.

அதிலும் துப்பாக்கிகளின் லேசர் லைட்டுகள் தலயின் முகத்தில் குறிபாயும் சூழலில் ‘நெவர், எவர்’ என்று நிதானமாக சொல்லி, பைக்கின் டாப் கியர் த்ராட்டிலிங் உச்சத்துக்கு போக ‘கிவ் அப்’ என்கிறாரே! ஆக்‌ஷன் ரணகளப்படுகிறது. இதற்கிடடையில் ‘மோஸ்ட் வாண்டட் கிரிமினல்’ என்று சி.ஐ.ஏ. அதிகாரிகள் புடைசூழ ஒருவர் நின்று பேசும் வாக்கியம் மற்றும் கடந்து செல்கிறது. அந்த கிரிமினல் தலயா? அல்லது அவன் தான் தலயின் டார்கெட்டா? என்று தெறிக்கிறான் ரசிகன்.

தலயின் காஸ்ட்யூம்களும் ரசிகனை ஆர்ப்பரிக்க வைத்து கொல்கின்றன. செம கார்ப்பரேட் லுக்கில் மிரட்டுகிறார். ஆர்மி கெட் அப், அடுத்த நொடியில் காட்டில் பதுங்கி வாழும் ரெபியூஜி லுக், ஸ்நோமேனாக வெளீர் வெள்ளை உடையில் பனிமலையில் என்று டீசர் முழுக்க கெத்து வெடிக்கிறது. ஒரு இடத்தில் கூட இன்ஃபார்மலாக இல்லை தல. சிச்சுவேசனுக்கு ஏற்ற காஸ்ட்யூம்கள் அவரது லுக்கை கட்டி ஏற்றுகின்றன. மொத்தத்தில் மாஸ் அண்டு கிளாஸாக இருக்கிறார்.

நொடிக்கு நொடி புல்லட்டுகள் பாயும் டீஸரின் இடையில் தலயின் வழக்கமான கூலர்ஸ் அணியும் ஃப்ரேம்களும் அள்ளு கிளப்புகின்றன. கும்பலாக ஒரு டீம் சாலையில் துப்பாக்கியால் சுட்டபடி நகர்வதை பார்த்தால் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ விவகாரத்தை டீல் பண்ணியிருப்பார்களோ என்று எண்ண வைக்கிறது.

மழை பெய்து முடித்த நிலையில் பாசி படர்ந்த படிக்கட்டுகளை தட்டான்கள் மொய்ப்பது போல் ஹெலிகாப்டர்கள் ஒரு இடத்தை டார்கெட் செய்ய, அவற்றுக்கும் மேலிருந்து ஷூட் செய்யப்பட்ட  ஃப்ரேம் படத்தின் மிரட்டல் மேக்கிங்கிங் ஒரு துளி உதாரணம்.

பனிக்காட்டினுள் மரங்களையெ ஜிம் ப்ராப்பர்டீஸாக்கி வொர்க் அவுட் செய்யும் காட்சிகளில் ரசிகனுக்கு மூச்சு வாங்குகிறது.

ரிலீஸான நொடியிலிருந்து அரைமணி நேரம், ஒரு மணி நேரம் என்று ஒவ்வொரு மணி நேரத்தையும் கணக்கு வைத்து ரஜினி மற்றும் விஜய்யின் பழைய டீஸர் ரெக்கார்டுகளை விவேகம் அடித்துக் காலி செய்து கொண்டிருப்பதாக களிப்பில் கதறுகிறார்கள் தலயின் ரசிகர்கள்.

இந்த உற்சாகம்தானே அஜித்தின் சக்ஸஸ்! நெவர் எவர் கிவ் இட் அப் ரசிகா!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?