விஷால் மூன்றாம் தர தாதா போல தன் ரசிகர்களை விட்டு மிரட்டுவது கேவலமானது – பிண்ணி எடுக்கும் சுரேஷ் காமாட்சி…

 
Published : May 11, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
விஷால் மூன்றாம் தர தாதா போல தன் ரசிகர்களை விட்டு மிரட்டுவது கேவலமானது – பிண்ணி எடுக்கும் சுரேஷ் காமாட்சி…

சுருக்கம்

Vishal Third-grade Dada is intimidating his fans out of it - choreographed by Suresh Kamatchi

நடிகர் சங்கம் குறித்து தான் தெரிவித்த கருத்துக்காக ரசிகர்களை விட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் விஷால் மீது தயாரிப்பாளரும், இயக்குநரமான சுரேஷ் காமாட்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகார்:

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் திரு.விஷால் அணிக்கு எதிரான அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் தொடர்பான பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். 

எனக்கும் திரு விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் முன்விரோதமோ பகையோ கிடையாது.

சமீபத்தில் நடிகர் சங்க கட்டடத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்குக் காரணம், அந்த சங்க கட்டடம் கட்டப்படுவதில் இருந்த ஆக்கிரமிப்பு முறைகேடுகள். இதைச் சுட்டிக் காட்டி, நடிகர் சங்கத்தின் செயல்பாட்டை விமர்சித்து எனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தேன். மிக கண்ணியமாக நான் தெரிவித்திருந்த கருத்து அது. 

ஆனால், இதனை தனக்கு எதிரான விஷயமாகக் கருதிய திரு.விஷால், தனது ரசிகர்களைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு என் தொலைபேசி எண்ணைத் தந்து மிரட்டுகிறார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருக்கும் ராபின் மற்றும் விஷால் ரசிகர் மன்றத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கமலக் கண்ணன் ஆகிய இருவரும், விஷாலின் ரசிகர் ஒருவர் என்னை ரௌடித்தனமாக மிரட்டும் குரல் பதிவை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு செய்துள்ளனர்.

விஷால் தூண்டுதலின்பேரில், அவருடன் இருக்கும் நபர்களே இந்த மிரட்டலை எனக்கு விடுத்துள்ளதாக நான் கருதுகிறேன்," என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட வட பழனி காவல் நிலைய ஆய்வாளர், விசாரணை மேற்கொள்வதாக சுரேஷ் காமாட்சியிடம் உறுதியளித்தார். 

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறுகையில், "விஷாலின் ரசிகர்கள் என்ற பெயரில் எனக்கு போன் செய்து எச்சரித்தவர்களை நினைத்தாலே காமெடியாக உள்ளது. தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்ட விஷாலுக்கு, விமர்சனங்களையும் எதிர்க் கருத்துக்களையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏதோ மூன்றாம் தர தாதா போல, தன் ரசிகர்களை விட்டு தொல்லை தருவது கேவலமானது. இதுபோன்ற செயல்களை விஷால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே போலீஸில் புகார் செய்தேன்," என்று அதிரடி காட்டியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?