ஆபாச பட அபிமானிகளுக்கு சவுக்கடி கொடுத்த வெற்றிமாறன்!!!

 
Published : May 11, 2017, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
ஆபாச பட அபிமானிகளுக்கு சவுக்கடி கொடுத்த வெற்றிமாறன்!!!

சுருக்கம்

vetrimaran who was whisked by pornography

பிரபல நடிகையின் பாத்ரூம் குளியல் முதல் பூட்டிய அறைக்குள் நடக்கும் புதுமண தம்பதிகளின் தாம்பத்திய உறவு வரையிலான அந்தரங்க விஷயங்களை ரகசிய கேமரா மூலம் சில விஷமிகள் படமாக்கி அதனை யூடியூபில் பதிவேற்றி விடுகின்றனர் என இயக்குனர் வெற்றிமாறன் ஆபாச பட பிரியர்களை வறுத்தெடுத்துள்ளார்.

இதனால் ஏற்படும் பாதிப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘லென்ஸ்’. ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் இயக்கி நடித்துள்ளார். மேலும் ஆனந்த்சாமி, அஸ்வதி லால், மிஷா கோஷல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.



இதுபற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறும்போது, “யாருமே இக்கதையைத் தயாரிக்க முன்வராத நிலையில் எனது வீடு நிலத்தை விற்றுத் தயாரித்தேன்.

சர்வதேச பட விழாக்களில் படம் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றபோதும் ரொக்கப்பரிசு எதுவும் கிடைக்கவில்லை. படத்தைப் பார்க்க வரும்படி பலமுறை விநியோகஸ்தர்களை அழைத்தேன். வருவதாகக் கூறிவிட்டு வராமல் ஏமாற்றிவிட்டார்கள்.



கடைசியாக இயக்குநர் வெற்றிமாறனிடம் சென்றபோது படத்தைப் பார்த்து பாராட்டியதுடன், இது மிக அவசியமான படம். சமூகத்துக்குப் போய் சேர வேண்டும். பொறுமையாகக் காத்திருங்கள். சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யலாம் என்றதுடன் இப்படத்தின் ரிலீஸுக்கு உதவியிருக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர்  வெற்றிமாறன் கூறுகையில், காக்கா முட்டை, விசாரணை படத்தைவிட இது மிக முக்கிய படம் லென்ஸ். அதனால்தான் இப்படம் மக்களுக்குப் போய் சேர வேண்டும் என்று விரும்பினேன். இதுவொரு விழிப்பு உணர்வு படமாகவும் நிச்சயம் இருக்கும் என தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?