அஜித், விஜயை, தொடர்ந்து ஐரோப்பா செல்லும் தனுஷ்...

 
Published : May 10, 2017, 08:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
அஜித், விஜயை, தொடர்ந்து ஐரோப்பா செல்லும் தனுஷ்...

சுருக்கம்

dhanush next shooting place erope

தல நடிக்கும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு, ஐரோப்பிய நாடுகளில் எடுக்க துவங்கியதில் இருந்து, கோலிவுட் முன்னணி நடிகர்களின் படம் அனைத்தும் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

'விவேகம்' படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது விஜயின் 61 வது படத்தின் படப்பிடிப்பு, ஐரோப்பிய நாடுகளின் இன்னொரு நாடான மாசிடோனியாவில் படமாக்கப்பட்டு வருகிறது.

விஜயை தொடர்ந்து, தற்போது ப.பாண்டி வெற்றியில் திளைத்திருக்கும் தனுஷ், தான் நடித்த மற்றொரு படமான வடசென்னை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று தான் முடித்தார்.

இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படமான," 'The Extraordinary Journey of the Fakir " என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக பெல்ஜியம் நாட்டின் பிரச்சல்ஸ் நகருக்கு செல்லவுள்ளார் என கூறப்படுகிறது.

பிரபல ஈரான் இயக்குனர் "மர்ஜானே சட்ராபி" இயக்கும் இந்த படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களான 'பெரெனிஸ்  பெஜு',  மற்றும் "பார்க்கஹாட் அப்டி" உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் 'பண்டிட் குவீன்' படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?