கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்...

 
Published : May 10, 2017, 07:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்...

சுருக்கம்

k.s.ravikumar next movie announced

இன்றைய இளையதலைமுறை ரசிகர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பழம்பெரும் இயக்குனர்கள் பலர் படம் இயக்குவதையே விட்டுவிட்டனர். 

ஆனால் இளையதலைமுறையினர்களின் ரசனையை புரிந்து கொண்டு இப்போதும் வெற்றிப்படங்கள் கொடுக்கும் ஒருசில இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிகுமார்.

கடந்த 1990ஆம் ஆண்டு 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குனரான அவர் கடந்த ஆண்டு இயக்கிய 'முடிஞ்சா இவனை பிடி' வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் இம்முறை இயக்கவுள்ளது ஒரு தெலுங்கு படம். இந்த படத்தின் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். இந்த படம் அவருக்கு 102வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண் தயாரிக்கும் இந்த படம் வரும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?