
"கொல மாஸ்" விஸ்வாசம் டிரைலர் ஆன் தி வே என அப்படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் தன் ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் டிரைலரின் எடிட்டிங் படங்களை கம்பியூட்டரிலிருந்து படம் பிடித்து பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சிவா அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் என அடுத்தடுத்து ரசிகர்களை குஷியாக்கினார்.
இதனையடுத்து பேட்ட படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஜனவரி 10-க்கான முதல் நாள் காட்சி டிக்கெட்டை கூட வாங்கிவிட்டனர். ஆனால் விஸ்வாசம் டிரைலர் கூட வரவில்லை என கொல வெறியில் ட்விட்டரில் திரிந்தனர். ரசிகர்களின் டிவிட்டர் பதிவுகளை பார்த்த படக்குழு பாவப்பட்டு எடிட்டர் ரூபனிடம் டிரெய்லர் வெளியாகும் என ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்; Glory to God😇❤️🙏🏻
#KOLAmass ah oru Trailer, on the way🔥
#ViswasamTrailerSoon
#ViswasamThiruvizha
"
கொலமாஸ் டிரைலர் ஆன் தி வே" என என பதிவிட்டுள்ளார். ரசிகர்களும், #ViswasamTrailerSoon என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.